உலகிலேயே மிக உயரமான பாலத்தைக் கட்டியுள்ளது சீனா

பெய்ஜிங், ஏப்ரல்.13-

உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், கிராமப்புறங்களை இணைப்பதற்காக நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன.

தற்போது, உலகின் மிக உயரமான பாலமாக 1,854 அடி உயர ட்யுஜ் பாலம் இருக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தில், பெய்பென் ஆற்றின் துணை நதியான நிஸு ஆற்றின் மீது இந்த பாலம் உள்ளது. இந்நிலையில், அதை விட மிக அதிக உயரமாக 2,051 அடி உயரத்தில், பெய்பென் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது.


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் கோபுரத்தின் உயரம் 1,082 அடி. ஆனால் இந்த பாலத்தின் உயரம் 2,051 அடி. வரும் ஜூன் மாதம் இந்த பாலம் திறக்கப்படுகிறது. இந்த பிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS