எல்-குனா, ஏப்ரல்.13-
தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி எல்-குனா அனைத்துலக ஸ்குவாஷ் போட்டியின் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளார். முதலாவது சுற்றில் அவர் நாட்டின் மற்றொரு வீராங்கனையான ஐரா அஸ்மானை நேரடி செட்களில் தோற்கடித்தார். அதற்கு சிவசங்கரி எடுத்துக் கொண்ட நேரம் 17 நிமிடங்களே.
உலகத் தர வரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கும் சிவசங்கரி ஐரா அஸ்மானுக்கு எதிரான ஆட்டங்களில் ஈட்டிய மூன்றாவது வெற்றி அதுவாகும். அவர் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு துவாங்கு முஹ்ரிஸ் கிண்ணம் மற்றும் 2025 ஆம் ஆண்டு நியூசிலாந்து பொது ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் ஐராவை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையெ மற்றொரு தேசிய வீராங்கனை ரேச்சல் அர்னால்ட், உபசரணை நாடான எகிப்து வீராங்கனை செய்னா மிக்காவியை 50 நிமிடங்களில் வெற்றி கொண்டார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீராங்கனைச் சந்திக்கவிருக்கிறார்.