புத்ரா ஹைட்ஸ் சம்பவம்: 37 மாணவர்களுக்கு மடிக்கணினி

சுபாங் ஜெயா, ஏப்ரல்.13-

புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் கல்விக்கும் தகவல் தொடர்பு தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியாக, மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் அவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உடைமைகளை இழந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 37 மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர மடிக்கணினிகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு கைபேசிகளும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு 265 மடிக்கணினிகளும் எம்சிஎம்சி மூலம் வழங்கப்படும். இந்த கருவிகள் விரைவில் படிப்படியாக வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக, அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு 302 மடிக்கணினிகளும் 620 கைபேசிகளும் வழங்கப்படும். சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமீபத்தில் புத்ரா ஹைட்ஸ் மஸ்ஜிதில் உள்ள தற்காலிக தங்குமிட மையத்திற்கு சென்றபோது இந்த உதவிகளை வழங்கினார். தகவல் தொடர்பு அமைச்சின் துணைச் செயலாளர் மனோ வீரபத்ரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

WATCH OUR LATEST NEWS