மலையேறும் போது நான்கு சிநேகிதிகள் தவறி விழுந்தனர்

சுக்காய், ஏப்ரல்.15-

கெமாமானில் உள்ள தெலுக் மாக் நிக் கடற்கரைக்கு அருகில் உள்ள புக்கிட் பெண்டேராவில் மலையேறும் போது, நான்கு பெண்கள் தவறி விழுந்துள்ளனர். 18 வயதுடைய அந்த இளம் பெண்களில் ஒருவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக கெமாமான் தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரி ஜுனைடி முகம்ட் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் அவர்கள் நடந்த பிறகே காயமடைந்த பெண் பலவீனமாகி நிற்க முடியாமல் போனார். மற்றவர்கள் மீட்புத் துறையைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS