குவாந்தான், ஏப்ரல்.15-
நாளை பஹாங் மாநிலக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட பகாங் மாநில ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா உத்தரவிட்டுள்ளார். நேற்று காலமான காலஞ்சென்ற துன் அப்துல்லா அஹ்மாட் படாவிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பகாங் மாநில அரசு செயலாளர் டத்தோ நஸ்ரி அபி பாகார் தெரிவித்தார்.