நடிகர் அஜித் குமார் நடிப்பில் அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து அஜித் யார் நடிப்பில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், அஜித் அடுத்து ‘வாத்தி, லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெங்கி சூர்யா 46 படத்தை முடித்துவிட்டு அடுத்து அஜித் படத்தை இயக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.