பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.16-
உலகளாவிய நிலையில் புவிசார் அரசியல் சவால்கள் தொடர்ந்து நிலவி வந்த போதிலும் சீனாவுடனான மலேசியாவின் கூட்டு பங்காளித்துவம் வலுவுடன் வளர முடியும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு, வலுவான விநியோகச் சங்கிலித் தொடர்பு, தொழில்துறை ஒத்துழைப்பு, மேம்பட்ட உறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையில் இந்த கூட்டு பங்காளித்துவம் வளரும் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, இன்று காலையில் இஸ்தானா நெகராவில் வரவேற்று நடத்திய சந்திப்புக்குப் பின்னர் மாமன்னர் இதனைத் தெரிவித்தார்.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் பிராந்திய இணைப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியுடன் இது ஒத்துப் போவதால், சீன நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மலேசியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதற்கு பெரும் கட்டமைப்பு இருப்பதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்தானா நெகாராவில் சீன அதிபரை வரவேற்கும் நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.