மெட்ரிட், ஏப்ரல்.16-
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பார்சலோனா பிஎஸ்ஜியும் சந்திக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில் பார்சலோனா, பொரூஸ்யா டோட்மனிடம் 1க்கு 3 என்ற கோல்களில் தோல்வி கண்டது. இருப்பினும் 5க்கு 3 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் பார்செலோனா அரையிறுதிக்குள் நுழைந்தது.
இவ்வேளையில் மற்றோர் இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி, ஆஸ்டன் வில்லாவைச் சந்தித்தது. அவ்வாட்டத்தில் பிஎஸ்ஜி, ஆஸ்டன் வில்லாவிடம் 2க்கு 3 என்ற கோல்களில் தோல்வியுற்றது. எனினும் 5க்கு 4 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் பார்சலோனா, இண்டர் மிலான் அல்லது பாயன் மூனிக்குடன் களம் காணும். அதே வேளை பிஎஸ்ஜி, ஆர்செனல் அல்லது ரியால் மெட்ரிட்டுடன் மோதும்.