காபூல், ஏப்ரல்.16-
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இன்று அதிகாலை 4.43 மணிக்கு அந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியிருந்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக டில்லி உட்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சல் அடைந்தனர்.