கோலாலம்பூர், ஏப்ரல்.17-
மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துக் கொண்டு திரும்பியுள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையானது, நாட்டின் வர்ததக உறவை வலுப்படுத்தும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் வர்ணித்துள்ளார்.
மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த 50 ஆண்டு காலமாக கட்டிக் காக்கப்பட்டு வரும் இரு வழி உறவின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியாக அணுக்கமான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.
உலகளாவிய நிலையில் நிர்ணயம் இல்லாத பொருளாதார சூழலில் சீன அதிபரின் மலேசிய வருகையானது, ஸீ ஜின்பிங்கிற்கும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
சீன அதிபரின் வருகையின் மூலம் சீனாவிற்கும், மலேசியாவிற்கும் இடையில் மொத்தம் 31 கருத்திணக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.