பேங்காக், ஏப்ரல்.17-
தாய்லாந்துக்கு அலுவல் பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வியாழக்கிழமை பேங்காக் சென்றடைந்தார். பிரதமரின் சிறப்பு விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.20 மணியளவில் பேங்காக், டோன் மிஆங் விமான நிலையம் அருகில் உள்ள தாய்லாந்து அரச ஆகாயப்படை விமானத் தளத்தில் டெர்மினல் 2 இல் தரையிறங்கியது.
டத்தோ ஶ்ரீ அன்வாரை, தாய்லாந்து துணைப்பிரதமர் ஜுவாங்ருங்ருவாங்கிட் மற்றும் தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் போங் யிக் ஜுய் ஆகியோர் வரவேற்றனர்.