மெட்ரிட், ஏப்ரல்.17-
ஆர்செனல் ஐரோப்பிய வெற்றியாளர் கால்பந்து போட்டியின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டம் கட்ட காலிறுதி ஆட்டத்தில் ஆர்செனல், ரியால் மெட்ரிட்டை 2க்கு 1 எனத் தோற்கடித்தது.
ஏற்கனவே முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில் அது, ரியாலை 3க்கு சுழியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. அவ்வகையில் 5க்கு 1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் ஆர்செனல் அரையிறுதிக்குத் தேர்வானது. அச்சுற்றில் ஆர்செனல் பிஎஸ்ஜி அணியைச் சந்திக்கும். வெற்றியாளர் லீக் கிண்ணத்தை முதல் முறையாக வெல்லும் இலக்குடன் ஆர்செனல் உத்வேகத்துடன் இருக்கிறது.