காசாவில் மனிதாபிமான உதவிகள் நுழையத் தொடர்ந்து தடை

ரமல்லா, ஏப்ரல்.17-

காசாவில் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா கூறியிருப்பதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் இரு மாதங்களாக காசா எல்லைக்குள் மனிதாபிமான உதவிகள் நுழையவில்லை. உதவிகள் இடையூறுகள் இன்றி விநியோகிப்படுவது அவசியம் என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளைச் செய்ய நியமிக்கப்பட்டப் பணியாளர்கள் தங்களது கடமையைச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். நேற்று வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆறு உதவி நடவடிக்கைகளில் இரண்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இத்தகையக் கட்டுப்பாடுகளால் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டு, நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்குவதாக ஐ.நா மேலும் கூறியது.

WATCH OUR LATEST NEWS