காரோட்டி கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

பெண்டாங், ஏப்ரல்.19

சாலைத் தடுப்பை மோதிய பின்னர் கார் ஒன்று, தீப்பிடித்துக் கொண்டதில் அதன் ஓட்டுநர், தப்பிக்க இயலாமல் கருகி மாண்டார்.

இச்சம்பவம் நேற்று முன்னிரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 65.3 ஆவது கிலோ மீட்டரில் கெடா , பெண்டாங் அருகில் நிகழ்ந்தது.

கார், தலைக் குப்புறக் கவிழ்ந்து, தீப்பிடிப்பதற்கு முன்பு, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை மோதியுள்ளதாக குவார் செம்பெடாக் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகமட் ஹப்பிஸாம் அப்துல் ரசிட் தெரிவித்தார்.

காரில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். இடிபாட்டிலிருந்து கருகிய உடலை மீட்கும் பணி பின்னிரவு 12.40 மணியளவில் முடிவடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS