உயர்க் கல்வித் திட்டம் 2025 – 2030 வரைவு தயாராகி விட்டது

கோலாலம்பூர், பிப்.27-

மலேசியாவின் உயர் நிலை கல்வி முறையை வளப்படுத்தும் 2025 ஆம் ஆண்டுக்கும் 2030 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திற்கான உயர்க் கல்வித் திட்ட வரைவு, தயாராகி விட்டதாக உயர்க் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த கல்வி முறையின் உள்ளடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலை பெறுவதற்காக அதன் நகல் வடிவம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் உயர்க் கல்வி முறையின் உள்ளடக்கம், வெளிநாட்டு ஆலோசனையின்றி, சுயமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உயர்க் கல்வி வரைவு, மலேசியாவின் எதிர்கால கல்வி முறையை வடிவமைப்பதில் அதன் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று உயர்க் கல்வி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயர்க் கல்வி முறை வரைவானது, கல்விமான் அஸ்மா இஸ்மாயில் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட கல்வி நிபுணர்கள் குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும். இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட கால அவகாசம் ஒன்பது மாதங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS