கோலாலம்பூர், ஏப்ரல்.19-
இன்று நடைபெற்ற மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் 44ஆவது பொதுக் கூட்டத்தில் அதன் நடப்புத் தலைவர்
நோர்ஸா ஸாகாரியா போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையில் நோர்ஸா ஸாகாரியா தொடர்ந்து பொறுப்பு வகிப்பார். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தவணைக் காலமாக நோர்ஸா ஸாகாரியா அப்பொறுப்பை வகித்து வருகிறார்.