பெண்டாங், ஏப்ரல்.19-
சாலைத் தடுப்பை மோதிய பின்னர் கார் ஒன்று, தீப் பிடித்துக் கொண்டு, அதன் ஓட்டுநர் கருகி மாண்ட சம்பவத்தில் சடலத்தை அடையாளம் காண்பதற்கு போலீசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளர்.
நேற்று முன்னிரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 65.3 ஆவது கிலோ மீட்டரில் கெடா, பெண்டாங் அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கியா சொனாதா ரகக் கார் சம்பந்தப்பட்டுள்ளது.
BGK 2338 என்ற அந்த பதிவு எண்ணைக் கொண்ட காரில் பயணித்தவர் யார் என்பதை அறிந்தவர்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பெண்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ரொட்ஸி அபு ஹாசான் தெரிவித்தார்.