மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் உலகளவில் ரூ.325 கோடி வசூலித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மோகன்லால் அடுத்து ‘துடரும்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. மோகன்லால் மிகப் பெரிய கால்பந்து ரசிகர் என அவருடைய ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக கால்பந்து வீரரான மெஸ்ஸி அவருக்கு மிகவும் பிடித்த வீரராகும்.
இந்நிலையில் கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர் கையெழுத்திட்ட ஜெர்ஸியை மோகன்லாலின் நண்பர்கள் மோகன்லாலுக்கு பரிசளித்துள்ளனர். இதனை மிகவும் நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மோகன்லால். அதில் அவர் “வாழ்க்கையில் சில தருணத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு நிகழ்வு இது. தி லெஜெண்ட் மெஸ்ஸி என்னுடைய பெயரை அவர் கையால் எழுதி கொடுத்துள்ளார். இதனை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். இது என் இரு நண்பர்களான Dr.ராஜீவ் மாங்கோட்டில் மற்றும் ராஜேஷ் பிலிப் இல்லாமல் நடந்திருக்காது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.