நடிகர் சிம்பு நீண்ட காலமாக வளர்த்தத் தாடியை எடுக்கிறாரா?

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக நடிகர் சிம்பு நீண்ட காலமாக தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், ’STR49’ படத்திற்காக அந்த தாடியை எடுக்க இருப்பதாகவும், இந்த படத்தில் அவர் ஒரு கல்லூரி மாணவன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு, சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது மூன்று புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் முக்கியமாக இடம்பெற்ற ஒன்று தான் ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’STR49’ திரைப்படம். தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

’STR49’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, நடிகை மிருணாள் தாக்கூர் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும், மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சிம்பு, நீண்ட காலமாக வளர்த்த தாடியை தற்போது ’STR49’ படத்திற்காக அகற்றும் முடிவுக்கு வந்துள்ளார். காரணம், இவர் இதில் கல்லூரி மாணவன் மற்றும் ரவுடி கேரக்டர்களில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்த செய்தி, சிம்பு ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைவார்கள் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS