ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகியாகப் பட்டம் பெற்றவர். இப்போதும் இந்திய மக்கள் மனதில் உலக அழகியாகவே அவர் வாழ்ந்து வருகிறார். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என நடித்தவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் தோன்றியிருந்தார்.
ஹிந்தியில் அதிக படங்கள் நடித்தவர் ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்கிறார்கள் என்ற பேச்சு இருந்தது. இது குறித்து அவர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர்.
இந்த நிலையில் திருமண நாளில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.