வியட்நாமை புக்கிட் ஜலீல் அரங்கில் சந்திக்கிறது ஹரிமாவ் மலாயா

கோலாலம்பூர், ஏப்ரல்.21-

ஹரிமாவ் மலாயா அணி, ஜூன் 10 ஆம் தேதி 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் வியட்நாமை  புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் சந்தித்து விளையாடும்.  
 
எதிர்பார்க்கப்பட்ட கடுமையான போட்டி இருக்கும் என ஹரிமாவ் மலாயா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ராப் ஃப்ரெண்ட் அறிவித்தார். உற்சாகமும் உணர்ச்சியும் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டிக்காக புக்கிட் ஜலீலுக்கு வியட்நாமை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.  
 
இது வெறும் தகுதிச் சுற்றுப் போட்டி மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களையும் தேசிய அணிக்குப் பின்னால் ஒன்றிணைக்கும் தருணம். நமது தேசிய உணர்வின் வலிமையைக் காட்டுவது என்று அவர் இன்று மலேசியா என்டியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

விசுவாசமான ஆதரவாளர்கள் அரங்கை நிரப்புவார்கள் என்றும், மலாயன் புலிகளுக்கு மன உறுதியை அளிக்க ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

மார்ச் 25 அன்று ஜோகூரில் உள்ள இஸ்கந்தர் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நேபாளத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா தனது F குழுக்கான ஆட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது. வியட்நாமுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, தேசிய அணி அக்டோபர் 9 ஆம் தேதி லாவோஸுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 

WATCH OUR LATEST NEWS