புதிய போப் தேர்வு நடைமுறைகளைத் தொடங்கிய கத்தோலிக்கத் திருச்சபை

வத்திகன், ஏப்ரல்.21-

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் பிரான்சிஸ், இன்று தனது 88வது வயதில் காலமானார். மறைந்த அவருக்கு உலகெங்கிலும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த போப் தேர்வு நடவடிக்கையை குறிக்கும் சடங்குகள் தொடங்கி உள்ளன. தற்காலிக சேம்பர்லைனாக, 77 வயதான கார்டினல் கெவின் ஜோசப் பாரெல், மரணத்தை உறுதிப்படுத்தவும் ஆரம்ப ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் பணிக்கப்பட்டார்.

பின்னர் அவர் போப்பின் தனிப்பட்ட குடியிருப்பை சீல் வைத்து இறுதி சடங்குகளுக்காக போப் சவப்பெட்டியை எப்போது செயின்ட் பீட்டர் தேவாலயத்துக்கு பொது பார்வைக்காக கொண்டு செல்லப்படும் என்பதை முடிவு செய்வார்.

இறந்த போப் உடல் பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாது. துக்க சடங்குகள் 9 நாட்கள் நீடிக்கும். இறுதி சடங்கு மற்றும் அடக்கம் தேதியை கார்டினல்களால் தான் தீர்மானிப்பர். உறுதிப்படுத்தல் முடிந்ததும், போப்பின் உடல் அவரது தனிப்பட்ட தேவாலயத்திற்கு மாற்றப்படுவது வழக்கம்.

அங்கு, அவரது பூதஉடல் ஒரு வெள்ளை நிற உடையணிந்து, துத்தநாகத்தால் மூடப்பட்ட மர சவப்பெட்டியில் வைக்கப்படும்.
இறுதிச் சடங்கு பொதுவாக இறந்த நான்கு முதல் ஆறு நாட்களுக்குப் பிறகு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும். போப், புனித பீட்டர் தேவாலய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார்.

இந்நிலையில், புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு வத்திகனின் சிஸ்டைன் தேவாலயத்தில், போப் காலமான நாளிலிருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் தொடங்குகிறது.

WATCH OUR LATEST NEWS