வத்திகன், ஏப்ரல்.21-
போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவு, உலகத்தில் உள்ள கிறிஸ்துவ மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ் இன்று திங்கட்கிழமை காலையில் உயிர் நீத்தார்.
போப்பாண்டவர் பெனடிக்ட் பதவி விலகிய பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த Jorge Bergoglio எனும் இயற்பெயரைக் கொண்ட பிரான்சிஸ், போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும், அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று Cardinal Farrel கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துகள்” தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, “அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்” என்று கூறினார்.
மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பழமையான நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பாரபரியமிக்கவர்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருந்தார்.