குவாந்தான், ஏப்ரல்.21-
பகாங் மாநிலத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் பிரச்னையை சமூகமான முறையில் தீர்வு காணப்பதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற டிராஸ் சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்பூரி ஷா புஜி T, மாநில அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளார்.
ரவூப் வட்டாரத்தில் அரசு நிலங்களில் மூசாங் கிங் டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்ட பிரச்னையைப் போல் மீண்டும் எழாமல் இருப்பதற்கும், இது போன்ற விவகாரங்கள் நல்ல முறையில் தீர்வு காண்பதற்கும் இத்தகையச் சிறப்புக் குழு அவசியமாகிறது என்று தெங்கு ஸுல்பூரி வலியுறுத்தியுள்ளார்.
நில சர்ச்சையில் அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதற்கான அணுகுமுறை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.