கஞ்சா கலந்து பிஸ்கட் விநியோகம் – அம்பலத்திற்கு வந்தது

கோலாலம்பூர், ஏப்ரல்.21-

கஞ்சா கலந்த பிஸ்கட்டுகள் விற்பனையை போலீசார் முறியடித்துள்ளனர். ஒரு பேக்கெட் 90 ரிங்கிட் வீதம் ஓன்லைன் மூலம் கும்பல் ஒன்று, இவ்வகை பிஸ்கட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.

கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

20 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய எண்மரும் கடந்த புதன்கிழமை புக்கிட் கியாரா, ஜோன்ஸ் கியாராவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் 32 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ கஞ்சா பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ருஸ்டி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS