கோலாலம்பூர், ஏப்ரல்.21-
மலேசிய தீயணைப்புப் படையில் ஆயிரத்து 181 வீரர்கள், உடல் பருமனாக இருப்பதாக அதன் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார். இதே போன்று 229 பேர் உடல் ரீதியாக பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூட்டுப் பிரச்னை முதலிய உபாதைகளை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். தங்கள் கடமையின் போது, துடிப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படுவதற்கு வீரர்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அதீத முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வீரர்கள் உடல் ரீதியில் வலிமையாகவும் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்வதற்கு மேலும் சில பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.