கோலாலம்பூர், ஏப்ரல்.21-
அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் போதைப்பொருள் ஜுஸ் குடித்துக்கொண்டு இருந்த போது பிடிபட்ட கோலாலம்பூர் மாநகருக்கு உட்பட்ட போலீஸ் நிலையம் ஒன்றின் தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த உயர் போலீஸ் அதிகாரி தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நன்னெறி வாரியத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த போலீஸ் அதிகாரி, பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கைப் பிரிவுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட எந்தவொரு வீரரும் குற்றத்தன்மையிலான செயல்களில் ஈடுபடுவது ஒரு போதும் அனுமதிக்க இயலாது என்று டத்தோ ருஸ்டி தெரிவித்தார்.