கார்த்திக் சுப்பராஜுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோவை இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் மே-1ஆம் தேதி வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு டான் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறார். அதேவேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும்.

இந்த நிலையில் புதிய படத்தில் இணைவது தொடர்பாக கார்த்திக் சுப்பராஜ்- சிவகார்த்திகேயன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சிவகார்த்திகேயன்- கார்த்திக் சுப்பராஜ் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், அது சிவகார்த்திகேயனின் 26ஆவது படமாக இருக்கும்.

WATCH OUR LATEST NEWS