பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.22-
சீனாவின் ஜியாமெனில் வரும் ஏப்ரல் 27 முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெறும் சுடிர்மான் கிண்ணப் பூப்பந்து போட்டிக்குச் செல்லும் தேசிய அணிக்கு, ஆண்கள் ஒற்றையர் பிரிவு வீரர் லியோங் ஜுன் ஹாவோ மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவு வீராங்கனை பேர்லி டான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இரண்டு கேப்டன்களை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று தேசிய இரட்டையர் பயிற்சி இயக்குனர் ரெக்ஸி மைனகி கூறினார்.
போட்டிக்கு முன்னதாக இருவரும் ஊக்கமளிக்கும் தலைமைத்துவ குணங்களைக் காட்டியுள்ளதாக அவர் மேலும் கூறினார். வழக்கமாக மிகவும் நிதானமாக இருக்கும் பேர்லி, அணியுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சுறுசுறுப்பாகிவிட்டார். ஜுன் ஹாவோவைப் பொறுத்தவரை, இது அவர் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறை என்றாலும், அவரது வளர்ச்சிக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று ரெக்ஸி குறிப்பிட்டார்.
போட்டிக்கு ஆயத்தமாக பகுதியாக தேசிய அணி செவ்வாயன்று ஒரு பரிட்சார்த்த போட்டியை நடத்தியது. அவர்கள் வரும் வியாழக்கிழமை ஜியாமெனுக்குப் புறப்படவுள்ளனர். இந்த முறை மலேசியா ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுடன் C குழுவில் இடம் பெற்றுள்ளது.து.