அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் திடீர் தீ

புளோரிடா, ஏப்ரல்.22-

அமெரிக்காவில் பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம் திடீரென தீப்பிடித்தது. மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் அட்லாண்டாவுக்குச் செல்லவிருந்தது. விமானத்தில் 282 பயணிகள், 10 விமானப் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து, துரிதமாக இறங்கிய மீட்புப் படையினர், பயணிகளையும், பணியாளர்களையும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS