சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது, அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அடுத்து சிவகார்த்திகேயன் யார் படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தற்போது ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தனுஷின் 3 படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.