குவாந்தான், ஏப்ரல்.23-
வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும் மலேசியக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் தோக் கஜா அணியின் ரசிகர்கள் ஊக்குவிக்கும் ஆதரவை வழங்குவார்கள் என்று ஸ்ரீ பகாங் கால்பந்து கிளப் (SPFC) நம்புகிறது.
SPFC தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டத்தோ முகமது சஃபியன் அவாங் கூறுகையில், ஸ்ரீ பஹாங்கிற்கு இம்முறை 33,600 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அவ்வணி ஆகக் கடைசியாக இறுதியாட்டத்தில் களமிறங்கியது. அதன் பிறகு கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரசிகர்கள் தேசிய அரங்கை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தோக் கஜா அணியின் ரசிகர்கள் ஆதரவின் அடையாளமாகவும், அவர்களின் அன்பான அணிக்கு ஒத்த நிறமாகவும் மஞ்சள் சட்டைகளை அணியுமாறும் கிளப் ஊக்குவிக்கிறது. இருப்பினும், வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மஞ்சள் சட்டை மற்றும் காற்சட்டை அணிவது ரசிகர்களைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 26ஆம் தேதி பஹாங் இறுதியாட்டத்தில் ஜேடிடியைச் சந்திக்கிறது.