புதுடெல்லி, ஏப்ரல்.23-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் விவகாரம் குறித்து புதுடில்லியில் உள்ள பிரதமர் அரசு இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியின் தலைமையில்,பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய காஷ்மீர் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, உளவு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.