காஷ்மீர் தாக்குதலில் 28 பேர் பலி

புதுடெல்லி, ஏப்ரல்.23-

இந்தியா, காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று பிற்பகலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மாண்டவர்கள் அனைவரும் சுற்றுப்பயணிகள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் அதில் அடங்குவர் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்தியக் கடற்படை அதிகாரியும் உயிரிழந்தவர்களில் ஒருவர்.

இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், தமது மனைவி, பிள்ளைகள் கண்முன் சுட்டுக் கொல்லப்பட்டார். கேரள உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் நூலிழையில் உயிர் தப்பியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS