கோலாலம்பூர், ஏப்ரல்,23-
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் முன்னெடுத்த சீர்திருத்தப் போராட்டம் இன்னும் மண்மூடி விடவில்லை என்று அவரின் புதல்வியும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நூருல் இஸா தெரிவித்துள்ளார்.
கெஅடிலான் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து தனது தந்தை முன்னெடுத்து வந்த சீர்திருத்தப் போராட்டம் இன்னுமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ரெபோஃர்மாசி என்ற சுலோகத்துடன் 26 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட்ட அந்த சீர்திருத்தப் போராட்டம், பழமையானது என்று கூறப்பட்ட போதிலும் அது ஓய்ந்து விட வில்லை என்று அன்வாரின் மூத்தப் புதல்வியான நூருல் இஸா தெரிவித்தார்.