பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.23-
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க சடங்கில் கலந்து கொள்வதற்கு மலேசியாவைப் பிரதிநிதித்து அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வார் என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
போப்பாண்டவர் பிரான்சிஸிஸ் இறுதிச் சடங்கு, வரும் சனிக்கிழமை வத்திகன் சிட்டியில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் போப்பாண்டவரின் மறைவுக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதாக டத்தோ பாஃமி பாஃட்சீல் குறிப்பிட்டார்.
மலேசியாவில் உள்ள வத்திகன் தூதரகத்தில் மலேசிய அரசாங்கம் சார்பில், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஏவோன் பெனடிக், போப்பாண்டவரின் மறைவையொட்டிய அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திடுவார் என்று டத்தோ பாஃமி தெரிவித்தார்.