புத்ராஜெயா, ஏப்ரல்.23-
சீனாவுடன் மலேசியா செய்து கொண்ட 31 கருத்திணக்க ஒப்பந்தங்களும் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
கையெழுத்திடப்பட்டுள்ள இந்தக் கருத்திணக்க ஒப்பந்தங்கள் அமலாக்கத்தை வெளியுறவு அமைச்சு ஒருங்கிணைக்கும் என்று அமைச்சரவை முடிவு எடுத்துள்தாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.
சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் மலேசிய வருகையையொட்டி கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த 31 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.