லண்டன், ஏப்ரல்.24-
லெய்செஸ்டர் அணியின் கேப்டன் ஜேமி வார்டி, இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் அந்த முன்னாள் சாம்பியனை விட்டு வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இங்கிலீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்ற அணியின் மிகச் சிறந்த வீரராக அவர் கருதப்படுகிறார்.
38 வயதான இங்கிலாந்தின் அந்த முன்னாள் வீரர், 2012 ஆம் ஆண்டு லீக் அல்லாத அணியான ஃப்ளீட்வுட் டவுனில் இருந்து £1 மில்லியன் (RM5.8 மில்லியன்)க்கு ஃபாக்ஸஸில் சேர்ந்தார் மற்றும் கிட்டத்தட்ட 500 போட்டிகளில் 198 கோல்களை அடித்தார்.
அவர் 143 கோல்களுடன் அந்த ஈபிஎல் கிளப்பில் அதிக கோல் அடித்தவர் ஆவார். 2015-16 ஈபிஎல் பருவத்தில் வார்டி 24 கோல்களை அடித்தார். கால்பந்து வரலாற்றில் பாஃக்ஸஸ் அணி தனது முதல் உயரிய பட்டத்தை வெல்ல அவர் உதவினார்.
2021 ஆம் ஆண்டு வெம்ப்லியில் செல்சியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி எப்ஃஏ கிண்ணத்தை வென்ற லெய்செஸ்டர் அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.