ஜோகூர் பாரு, ஏப்ரல்.24-
ஜோகூர்பாரு, மாவுன்ட் ஆஸ்தினில் உள்ள கேளிக்கை மையம் ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 53 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தச் சோதனையில் அந்த கேளிக்கை மையத்தின் உரிமையாளர் என்று நம்பப்படும் உள்ளூர்வாசி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
ஓப்ஸ் கெகார் என்ற குறியீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் கேளிக்கை மையத்தில் இருந்த 109 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவு இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி டாருஸ் தெரிவித்தார்.