கோலாலம்பூர், ஏப்ரல்.25-
ஐரோப்பா சந்தைக்குப் போதைப் பொருளைக் கடத்திச் செல்லும் அனைத்துலக போதைப் பொருள் கும்பல் ஒன்றை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 26 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இடைக்கால இயக்குநர் துணை கமிஷனர் மாட் ஸைனி முகமட் சாகாஹூடின் சே அலி தெரிவித்தார்.
ஐரோப்பா சந்தை உட்பட வெளிநாடுகளுக்குப் போதைப் பொருளைக் கடத்துவதில் மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 34 வயது உள்ளூர்வாசி ஒருவர் மற்றும் 38 வயதுடைய சீனப்பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துணை கமிஷனர் மாட் ஸைனி இதனைத் தெரிவித்தார்.