பெரிக்காத்தான் நேஷனலுடன் அம்னோ ஒத்துழைப்பா?

தாப்பா, ஏப்ரல்.25-

பேரா மாநில அரசாங்கத்தை அமைப்பதில் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து ஒத்துழைப்பு கொள்வதில் அம்னோவிற்கு ஆர்வமில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனை நேரடியாகவே எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடினிடம் தாம் தெரிவித்து விட்டதாக துணைப் பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுடன் அம்னோ ஒத்துழைப்பு கொள்ளும் என்று பகல் கனவு காண வேண்டாம் என்பதைத் தாம் திட்டவட்டமாகத் தெரிவித்தாக அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

பேரா மாநிலத்தின் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பது மூலம் பன்றிப் பண்ணைப் பிரச்னை உட்பட எந்தவொரு விவகாரத்தையும் அம்னோவுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் தீர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக ஹம்ஸா ஸைனுடின் வெளியிடுள்ள அறிக்கை தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் அஹ்மாட் ஸாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS