ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

குயுட்டோ, ஏப்ரல்.25-

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது உண்டு. அவ்வகையில் இன்று அங்குள்ள கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது.

எல்லை மாகாணமான எஸ்மராஸ்டாசில் 35 கி.மீ.,ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் குயுட்டோவிலும் நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டு உள்ளது. ஆனால் அதன் எதிரொலியாக ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

WATCH OUR LATEST NEWS