போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு: கடைசி நேர ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன

வத்திகன் சிட்டி, ஏப்ரல்.25-

மறைந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸின் இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது. இறுதிச் சடங்கிற்கான கடைசி நிமிட ஏற்பாடுகள் வத்திகன் நகரில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தப் பெருந் திரளானக் கூட்டம் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குப் போப்பாண்டவரின் நல்லுடல் திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனிய அதிபர் Volodymyr Zelensky, இந்திய அதிபர் Droupadi Murmu உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்களும், 10 மன்னர்களும் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

முக்கிய உலகத் தலைவர்கள் அனைவரும் நாளை சனிக்கிழமை ரோம் சென்றடைவர். குறைந்தது 130 வெளிநாட்டுப் பேராளர்கள் போப்பாண்டவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வர். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வத்திகன் அதிகாரிகள் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS