பினாங்கு ஆளுநராக மே முதல் தேதி பதவி உறுதி எடுத்துக் கொள்வார் துன் ரம்லி ங்கா தாலிப்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.25-

பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள துன் ரம்லி ங்கா தாலிப், வரும் மே முதல் தேதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார் என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

துன் ரம்லி ங்கா தாலிப்பின் பதவி உறுதிமொழிச் சடங்கு, டேவான் ஶ்ரீ பினாங்கில் நடைபெறும். பினாங்கு மாநில அரசிலமைப்புச் சட்டம் முதலாவது விதியின் கீழ் பதவி உறுதிமொழிச் சடங்கு நடைபெறும்.

பதவி உறுதிமொழிச் சடங்கை பினாங்கு அரசு செயலாளர் டத்தோ ஸுல்கிப்ளி லோங் முன்நின்று நடத்துவார் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும், நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமான 84 வயது துன் ரம்லி ங்கா தாலிப், பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக மாமன்னர் சுல்தான் இப்ராஹிடமிருந்து நேற்று பதவி நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

WATCH OUR LATEST NEWS