கோலாலம்பூர், ஏப்ரல்.25-
மலேசிய மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை விதைக்கவும், அதனை வளப்படுத்தும் முயற்சியாக 2025 ஆம் ஆண்டு வாசிக்கும் பழக்கத்திற்கான புத்தக வவுச்சர் பிரச்சார இயக்கத்திற்கு அரசாங்கம் பத்து லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.
இந்த நிதி, மலேசிய தேசிய நூலகத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசிய புத்தக அச்சகச் சங்கம், மலேசிய தேசிய நூல் மன்றம், மலேசிய புத்தக விற்பனைச் சங்கம் மற்றும் மலேசிய புத்தக வெளியீட்டு மன்றம் ஆகியவற்றின் வாயிலாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது கல்வி உபகரணங்களை வாங்குவதில் மக்கள் கொண்டுள்ள சுமையை எளிதாக்குவதையும் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன் நாட்டில் புத்தகத் துறையை மேம்படுத்த உள்நாட்டு புத்தகங்களுக்கு செலவிடப்படும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று அமைச்சர் விளக்கினார்.