மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு

இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்.26-

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த வாரம் போலீசார் தொடங்கிய ஓப் லெஜாங் ஹாஸ் நடவடிக்கையின் வாயிலாக இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற ஓப் லெஜாங் ஹாஸ் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட கும்பலால் திருடப்பட்டவை என்று நம்பப்படும் 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள் திருட்டுத் தொடர்பில் 26 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS