பாரோ, ஏப்ரல்.26-
தாய்லாந்து மன்னர் மஹா வஜிராலொங்கோர்ன், தாம் சொந்தமாகச் செலுத்திய போயிங் 737 ரக விமானத்தை பூட்டான் தலைநகர் திம்பூவிலிருந்து பாரோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கினார்.
உலகில் விமானங்கள் தரையிறங்குவதற்கு மிகச் சவால் நிறைந்த விமான நிலையங்களில் ஒன்றான பூட்டான் நாட்டில் உள்ள மலைகளும், சமவெளிகளும் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கான பாரோ விமான நிலையத்தில், மிகச் சாமார்த்தியமாக தாய்லாந்து மன்னர், அந்த பெரிய போயிங் விமானத்தைத் தரையிறக்கினார்.
தாய்லாந்து மன்னருக்கு உதவியாகத் துணை விமானியான அவரின் துணைவியார் பேரரசி சுதிடா அருகில் அமர்த்திருந்தார். அரசி சுதிடா, வான் போக்குவரத்துத் துறையில் லைசென்ஸ் பெற்ற விமானி ஆவார்.
தாய்லாந்து மன்னர் மஹா வஜிராலொங்கோர்ன், தமது துணைவியாருடன் தெற்காசிய நாடான பூட்டானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.