ஆயர் கூனிங் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது

தாப்பா, ஏப்ரல்.26-

இன்று நடைபெற்ற ஆயர் கூனிங் இடைத் தேர்தல், எவ்வித அசம்பாவிதமின்றி சுமூகமாக நடைபெற்றதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்களிப்பில் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற இந்த இரண்டு வாரக் காலத்தில் 10 போலீஸ் புகார்கள் பெறப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS