தாப்பா, ஏப்ரல்.26-
இன்று நடைபெற்ற பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மகத்தான வெற்றி பெற்றது.
மும்முனைப் போட்டியில் அம்னோ சார்பில் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாக்கீர் 4,619 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
டாக்டர் முகமட் யுஸ்ரிக்கு 10,034 வாக்குகளும், பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் முஹைமின் மாலேக்கிற்கு 5,415 வாக்குகளும் பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் பவானி கேஎஸ்ஸுக்கு 948 வாக்குகளும் கிடைத்தன.
பாரிசான் நேஷனல் மகத்தான வெற்றி பெற்றது மூலம் அது தனது பாரம்பரியத் தொகுதியான ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொண்டது.