கோலாலம்பூர், ஏப்ரல்.26-
மலேசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் புக்கிட் ஜாலில் அரங்கில் ஜோகூர் ஜேடிதி அணிக்கும், ஶ்ரீ பஹாங் எப்ஃசி அணிக்கும் இடையில் நடைபெற்ற வேளையில் அரங்கிற்கு வெளியே இரு அணியினரின் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கால்பந்தாட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு அணியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு இடையில் கைகலப்பு நிகழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஒருவருக்கொருவர் சினமூட்டும் செயலில் ஈடுபட்டதால் இந்த கைகலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. எனினும் போலீசார் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.